"திமுகவில் சாதி பாகுபாடு" - உதயநிதியை டேக் செய்து பா.ரஞ்சித் பரபரப்பு ட்வீட்

x

திமுகவில் பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களைவார் என இயக்குநர் பா.ரஞ்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாமன்னன் படக்குழுவை பாராட்டி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது மாமன்னன் படம் எனக் குறிப்பிட்டுள்ளார். உண்மையாகவேஎன பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் வும், திமுக கட்சியில் இன்று வரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம் என்றும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்