"வழக்கை ரத்து செய்ய முடியாது" - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

x

போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் மணிஷ் காஷ்யப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், வெறுப்பை விதைக்கும் வகையில் போலியான செய்திகளின் அடிப்படையில் வீடியோக்களை மணிஷ் காஷ்யப் மாற்றி அமைத்துள்ளதாகவும், மாற்றி அமைக்கப்பட்ட வீடியோக்களை பின்னணியாகக் கொண்டு, தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேற்றுமையையும், விரோதத்தையும் வளர்க்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே திட்டமிட்டு கேள்வி எழுப்பி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்