ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை

x

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை ஜூலை 11-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன் கடந்த பிப்ரவரி மாதம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அந்த மனுக்களை விரைந்து விசாரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு, வரும் 11-ஆம் தேதி முதல் அந்த மனுக்களை விசாரிக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்