இசை புயலை கவுரவித்த கனடா - "இது வெறும் பெயரல்ல..." - ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி

x

தன்னை கவுரவித்த கனடாவின் மார்கம் நகர அரசுக்கு ஏ.ஆர். ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானை கவுரவிக்கும் விதமாக, Markham என்ற நகரில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இதற்கு டிவிட்டரில் மகிழ்ந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், தன்னை கவுரவித்த மார்கம் நகர மேயருக்கும், கனட மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ரஹ்மான் என்ற பெயர் கனட மக்களிடம் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என குறிப்பிட்டுள்ள ரஹ்மான், இதன்மூலம் கூடுதல் பொறுப்பு வந்துவிட்டதாக நெகிழ்ந்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்