நகை கடையில் மோதிய பேருந்து ..தூள் தூளாக உடைந்த பேருந்தின் கண்ணாடி - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில், தனியார் பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காமல் நகை கடையில் மோதி விபத்துக்குள்ளானது.

ஆழ்வார்குறிச்சியில் இருந்து கடையத்திற்கு பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து வந்துள்ளது. கடையம் பேருந்து நிலைய வளைவில் பேருந்து திரும்பும்போது, பிரேக் பிடிக்காமல் அங்கிருந்த நகை கடையின் மீது மோதியது.

இதில், பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்து விழுந்த நிலையில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்