குடிநீர் பானையை தொட்டதால் ஆத்திரம் - பட்டியலின சிறுவனை தாக்கிய கொடூர ஆசிரியர் - மாணவன் பரிதாப மரணம்

x

குடிநீர் பானையை தொட்டதால் ஆத்திரம் - பட்டியலின சிறுவனை தாக்கிய கொடூர ஆசிரியர் - மாணவன் பரிதாப மரணம்


ராஜஸ்தானில் குடிநீர் பானையை தொட்டதால் ஆசிரியரால் தாக்கப்பட்ட 9 வயது பட்டியலின மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஜலோர் மாவட்டம் சுரானா கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த இந்திர மேக்வல் என்ற 9 வயது சிறுவன், கடந்த 20ஆம் தேதி குடிநீர் பானையை தொட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர் சயில் சிங், சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று உயிரிழந்தார். சாதிய ரீதியில் தாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அசோக் கேலாட் உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்