கேட்டை உடைத்துக் கொண்டு... | பள்ளி வாளகத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் | நீலகிரியில் பரபரப்பு

x

கூடலூர் அருகே அரசு பள்ளிக்குள் நுழைந்த காட்டு யானைகள், கேட்டை உடைத்துக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் அய்யங்கொல்லியிலுள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி வாளகத்திற்குள் இரண்டு காட்டு யானைகள் புகுந்தன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், பள்ளிக்கு விரைந்து காட்டு யானைகளை விரட்டவே, இரண்டு யானைகளும் பள்ளியின் முன்பக்க கேட்டை உடைத்துக் கொண்டு ஓடின. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு விடுமுறை என்பதால், அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்