பிரதமர் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு மீது அவதூறு கருத்து - பாஜக ஐ.டி விங் தலைவருக்கு சம்மன்

x

பாஜக மாநில தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல் குமாருக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். தமிழக அரசு பாதுகாப்பு உறுதி அளிக்காததால், பிரதமர் மோடியின் தமிழகப் பயணம் தள்ளிப்போனதாக நிர்மல் குமார் தனது ட்விட்டர் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து மொகிந்தர் அமர்நாத் என்பவர், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், நிர்மல் குமார் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்