டிச.27-இல் கோவை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | BJP

x

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, வரும் 27-ஆம் தேதி கோவைக்கு வருகை தரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களைத் தேர்தலுக்குத் தயாராவது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு நாள் பயணமாக ஜே.பி.நட்டா, தமிழகம் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, மிக விரைவிலேயே அவர் மீண்டும் தமிழகம் வருவது, அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்