பட்டாசுக்கு டெல்லியில் ஒட்டுமொத்தமாக தடை விதிப்பு... உத்தரவை எதிர்த்து பாஜக எம்.பி. மனோஜ் திவாரி மனு

x

பட்டாசுக்கு டெல்லியில் ஒட்டுமொத்தமாக தடை விதிப்பு... உத்தரவை எதிர்த்து பாஜக எம்.பி. மனோஜ் திவாரி மனு

டெல்லி போன்ற மாநிலங்களில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடைக்கு எதிராக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மனோஜ் திவாரி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷஷாங் சேகர் ஜா, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தது. மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கட்டும் என்றும், அந்த பணத்தை இனிப்புகளுக்காக செலவிடுங்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்