போதையில் கார் ஓட்டி பொதுமக்களை இடித்து தள்ளிய பாஜக பிரமுகர் - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை வில்லிவாக்கத்தில் மது மோதையில் கார் ஓட்டி பொதுமக்களை இடித்து தள்ளிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்த நரசிம்மன் பாஜகவில் முன்னாள் தொழில் துறை மாநில செயலாளராக பதவி வகித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மதுபோதையில் கார் ஓட்டி வந்த நரசிம்மன், வில்லிவாக்கம் நாதமுணி அருகே வந்தபோது திடீரென சாலை ஓரத்தில் இருந்த 4 பேர் மீது மோதியுள்ளார்.

இதில் நால்வரும் படுகாயம் அடைந்தனர். காரில் இருந்து போதையில் தள்ளாடியவாறு கீழே இறங்கிய நரசிம்மனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிம்மனைக் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்