ஏவிஎம் ஸ்டுடியோஸை உருவாக்கிய ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு பிறந்தநாள் | AVM Studios

x

1907ல் காரைகுடியில் பிறந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், 1932ல் சென்னையில் கிராமபோன் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.1935ல் அல்லி அர்ஜுனா என்ற படத்தை தயாரித்து,திரைப்படத் துறையில் காலெடி வைத்தார். 1940ல் காரைகுடியில் பிரகதி ஸ்டுடியோஸை தொடங்கி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களை தயாரித்தார்.1945ல் சென்னையில் ஏவிஎம் புரெடக்சன்ஸ்.நிறுவனத்தை தொடங்கி, மிகப் பெரிய ஸ்டுடியோவைவட பழனியில் உருவாக்கினார்.சபாபதி, நாம் இருவர், வாழ்க்கை, வேதாள உலகம் போன்ற வெற்றி படங்களை தயாரித்து, இயக்கி பெரும் புகழ் பெற்றார். டப்பிங் மற்றும் பின்னணி பாடல் முறையை திரைப்படங் களில் அறிமுகப்படுத்தினார்.வைஜெயந்திமாலா, டி.ஆர்.மகாலிங்கம், சிவாஜி கனேசன், மேஜர் சுந்தர்ராஜன், கமலஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை அறிமுகப்படுத்தி, தமிழ் திரைப்பட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ், ஜெயலலிதா ஆகிய ஐந்து முன்னாள் முதல்வர்கள் ஏவி.எம்மோடு பணிபுரிந்திருக்கிறார்கள்.1952ல் சிவாஜியின் முதல் படமான பராசக்தி திரைபடத்தை தயாரித்து, தமிழ் திரைப்பட உலகில் புதிய அத்தியாத்தை தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்