பாருக்கு வெளியே இருதரப்புக்கு தகராறு - கத்தியால் சரமாரி தாக்குதலால் ஒருவர் உயிரிழப்பு

x

திருச்சி அரியமங்கலம் அருகே, இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலின்போது, கத்தியால் குத்தப்பட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர், பால் பண்ணை அருகே உள்ள தனியார் மதுபாரில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளார்.

அப்போது அந்த பார் மூடியிருந்துள்ளது. பாருக்கு வெளியே நின்றிருந்தபோது, செல்வம் தரப்பினருக்கும், வேறொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது.

அப்போது, எதிர் தரப்பினர் செல்வத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்