பைக்கும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - துடி துடித்து போன உயிர்கள்

x

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிக்கல் அருகே கொத்தங்குளம் என்னும் இடத்தில் இருசக்கர வாகனமும் ஸ்கார்பியோ காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளையராஜா, வெற்றி, முகமது ராஜா ஆகிய மூவரும் சம்பவத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை அங்கிருந்து எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து கீழக்கரை டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 3 உடல்களையும் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய காரில் வந்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்