பீகாரில் ஸ்டேஷனுக்குள் கைதிகளுடன் குடித்து கும்மாளம் அடித்த போலீஸ் அதிகாரிகள்-ஆப்படித்த வைரல் வீடியோ

x

பீகார் மாநிலம் பாலிகஞ்ச் பகுதியில் உள்ள கலால் காவல் நிலையத்திற்குள், 5 கைதிகள் 2 போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து, கைதிகள் காவல்நிலையத்திற்கு உள்ளேயே மது அருந்திய சம்பவம் தொடர்பான வீடியோ வேகமாக பரவியது. இதையடுத்து, 2 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 5 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்