கட்டில், மெத்தை, ஃபேன், டிவி.. வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி..-அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல்

x

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், நீதிமன்றக் காவலின்படி புழல் மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

முழுமையாக அவரது உடல்நிலை சீரடையாததால் சிறை மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல் வகுப்பு சிறையில் வைக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கட்டில், தலையணை, மின்விசிறி, மேசை, நாற்காலி, புத்தகங்கள், தனி கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிடைக்கப்பெற உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்