இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன்கள்..! - அராம்கோ நிறுவன அதிகாரி அதிரடி கைது

x

2008இல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியாவில் சேட்டிலைட் போன்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும், செயற்கைக் கோள்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் பயங்கரவாதிகளுக்கு இது வரப்பிரசாதமாக உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான மிகப் பெரிய பெட்ரோலிய நிறுவனமான அராம்கோவின் உயர் அதிகரியான ஃபெர்கஸ் மெக்லியாட் உத்தர்காண்டிற்கு கடந்த ஜூலையில் ஒரு சேட்டிலைட் போனுடன் சென்றிருந்தது கண்டறியப்பட்டது. தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனை வைத்திருந்தால், ஜூலை 12இல் அவர் கைது செய்யப்பட்டு, சமோலி சிறையில் ஒரு வாரம் அடைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. சேட்டிலைட் போன் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தான் அறிந்திருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்