பன்ஜா லூகா டென்னிஸ் தொடர்... காலிறுதியில் முன்னணி வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

x

போஸ்னியாவில் நடைபெற்றுவரும் பன்ஜா லூகா டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றில் செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் சக நாட்டு வீரர் டுசன் லஜோவிக் உடன் ஜோகோவிச் மோதினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லஜோவிக், 6க்கு 4, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி அளித்தார். தோல்வி அடைந்த ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார்.



Next Story

மேலும் செய்திகள்