கூர்மையான ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்படும் பாகுபலி யானை.. பொங்கி எழுந்த உயிரின ஆர்வலர்கள்

x

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, பாகுபலி என்று பெயரிடப்பட்ட காட்டு யானை சுற்றித் திரிகிறது. இந்த யானை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய பயிர்களை சாப்பிட்டுச் செல்வதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். எனினும், இந்த யானை இதுவரை பொதுமக்களை தாக்கியதாக எந்த சம்பவமும் பதிவாகவில்லை. இந்நிலையில், பாகுபலி யானையை அப்பகுதியினர் கடுமையாக தாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பட்டாசுகளை பற்ற வைத்து யானை மீது தூக்கி ஏறிவதாகவும், கூர்மையான ஆயுதங்களால் தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய செயல்கள் யானையின் இயல்பான குணத்தை மாற்றிவிடும் எனவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்