மூன்றாவது கணவருடன் ஏற்பட்ட தகராறு... இரண்டாவது கணவர் மேல் வந்த சந்தேகம் - கொடூரமாய் குப்பையில் கிடந்த பெண் சடலம்
அவிநாசி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான பெண் சுகன்யா. சுகன்யாவிற்கு அவரது மூன்றாவது கணவர் சரவணக்குமாருடன் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி தன்னை விட்டு வெளியேறி இரண்டாவது கணவருடன் இணைந்து விடுவாறோ என்ற பயத்தில், மனைவி சுகன்யாவை, சரவணக்குமார் படுகொலை செய்து குப்பைமேட்டில் வீசியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சரவணக்குமாரை கைது செய்த போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story