ஆவடி ரயில் நிலையத்தில் உடல் சிதறி கிடந்த பெண் தலைமை காவலர்

x

சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலையத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை பெண் காவலர் சடலமாக மீட்கப்பட்டார்.


சென்னை ஆவடி ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு, உடல் சிதறி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல்


கிடைத்தது. பின்னர் அங்கு வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


விசாரணையில், இறந்து கிடந்த பெண், திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ஸ்ரீபிரியா என்பதும், ஆலந்தூரில் உள்ள தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. தற்கொலையா? அல்லது விபத்தா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்