ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய அர்ஜெண்டினா..35வது நிமிடத்தில் மெஸ்சி அசத்தல்...உற்சாகத்தில் ரசிகர்கள்

x

உலக கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அர்ஜென்டினாஅணி காலிறுதிக்கு முன்னேறியது.

அகமது பின் அலி மைதானத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தொடக்கம் முதல் அர்ஜெண்டினா அணி சிறப்பாக விளையாடியது.

ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி கோல் அடித்து, தனது அணியை முன்னிலைபடுத்தினார்.

ஆஸ்திரேலியா கோல் எதுவும் அடிக்காததால், முதல் பாதியில் அணி அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது.


Next Story

மேலும் செய்திகள்