விறுவிறுப்பாகும் உலகக்கோப்பை ஹாக்கி..! - அரையிறுதிக்குள் நுழையுமா ஆஸ்திரேலியா?

x

ஒடிசாவில் நடைபெற்றுவரும் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இன்று 2 காலிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் ஸ்பெயின் மோதவுள்ளது. இரவு 7 மணிக்கு இதே மைதானத்தில் நடைபெறும் மற்றொரு காலிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்துடன் நியூசிலாந்து பலப்பரீட்சை நடத்த உள்ளது. கிராஸ் ஓவர் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த நியூசிலாந்து, பெல்ஜியத்தையும் ஆட்டம்காண வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்