தேர்வு மோசடியை தடுக்க புதிய அஸ்திரம் - இணைய சேவையை முடக்கிய அசாம் அரசு

x

அசாமில் அரசு பணியிடங்களில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வின் போது.... தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க தேர்வு நடக்கும் 4 மணி நேரத்திற்கு இணைய சேவையை அரசு நிறுத்தி வைத்தது.

அசாம் அரசு துறையில் காலியாக உள்ள 27 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வின் ஒரு பகுதி நேற்றும் அடுத்து வருகின்ற ஞாயிற்று கிழமை அன்றும் செப்டம்பர் 11 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறமால் இருப்பதை உறுதி செய்ய, தேர்வு நடக்கும் நேரங்களில் தேர்வு மையம் சுற்றி இணைய சேவையை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுத வரும் மாணவர்கள் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களை தங்களுடன் எடுத்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதோடு, தேர்வை வீடியோ மூலம் பதிவு செய்யவும், தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று இதே போல் இணைய சேவை சுமார் 4 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டதை அடுத்து, தாங்கள் ஆன்லைன் சேவைகளை பெற முடியாமல் மிகுந்த தவிப்புக்கு ஆளானதாக அசாம் மக்கள் பலரும் குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்