“மீறினால் அண்ணாமலையை கைது செய்யுங்கள்“ - ஆம் ஆத்மி ஆவேசம்

x

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவுள்ள நடைபயணத்தை தமிழக அரசு தடைச்செய்ய வேண்டும் என்று, ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில், சென்னையில் வசீகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசீகரன், தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவுள்ள நடைப்பயணத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்