90 நாடுகளுக்கு மேல் சுற்றி! உலகின் மோசமான 'Toilet' கண்டுபிடிப்பு

x

பிரிட்டிஷ் Blogger ஒருவர் 90 நாடுகளைச் சுற்றித் திரிந்து உலகின் மிக மோசமான கழிப்பறையைக் கண்டறிந்துள்ளார்.

நாமெல்லாம் ஏதாவது அதிசயங்களைக் காணத்தான் பொதுவாக சுற்றுலா பயணம் மேற்கொள்வோம்,

ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த க்ரஹாம் அஸ்கே என்பவர் மிக மோசமான கழிப்பறையைக் கண்டுபிடிப்பதற்காகவே 90க்கும் அதிகமான நாடுகளுக்கு பயணித்துள்ளார்,

இதற்காக கிட்டத்தட்ட 1 கோடியே 30 லட்ச ரூபாய் செலவழித்துள்ள க்ரஹாம், வெற்றிகரமாக அந்த மோசமான கழிவறையை வடக்கு தஜிகிஸ்தானில் உள்ள அய்னி பகுதியில் கண்டறிந்துள்ளார்,

இந்த பயணம் குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ள க்ரஹாம், இந்த கழிவறையை "மிகச்சிறந்த நரகத்தின் துளை" என்றும் வர்ணித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்