பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா..? - விமான கட்டணம் எவ்ளோ தெரியுமா..? வெளியான புதிய பட்டியல்...

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், சீட் கிடைக்காததால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 6 விமானங்களிலும் இன்று டிக்கெட் இல்லாததால், பெங்களூர் வழியாக மதுரைக்கு, இன்று 3 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து மதுரைக்கு 4000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் இருக்கும் நிலையில், இந்த 3 விமானங்களில் டிக்கெட் கட்டணம் 15 ஆயிரத்தில் இருந்து 19 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் விமானங்களில் 14 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் உள்ளது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்களில் ஒரு சில டிக்கெட்களே எஞ்சி இருக்கும் நிலையில், டிக்கெட் கட்டணம் 9 ஆயிரத்தில் இருந்து 13 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

இதேபோல், சென்னையில் இருந்து கோவைக்கு 10 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பயணிகள் அதிக கட்டணங்கள் கொடுக்க முன் வந்தாலும் விமானங்களில் சீட் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளதால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்