வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

x

வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து கண்காணிக்க 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.வரும் ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு, வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குறைந்தது மூன்று முறையாவது சென்று மேற்பார்வையிட்டு, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களைச் சந்தித்து வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்வார்கள். அவர்களின் ஆய்வுக்குப் பின்னர், தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்