இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம் | India | I Phone

x

உலகெங்கும் ஆப்பிள் நிறுவனத்திற்காக ஒப்பந்த முறையில் ஐபோன்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் 190 உள்ளன. இவற்றின் 12 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. மிகப் பெரிய ஐபோன் உற்பத்தி நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், பெகட்ரான் மற்றும் விஸ்ட்ரான் ஆகியவற்றின் உற்பத்தி அளவை அதிகரிக்க, ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 2025ல் ஐபோன்கள் உற்பத்தியில் 25 சதவீதத்தை இந்தியாவிற்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் ஏராளமான புதிய எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்