Tony Stark தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம்

x

'ஆப்பிள் விஷன் ப்ரோ' என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஹெட்செட், மெய்நிகர் தொழில்நுட்பத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இது ஏ.ஆர். எனப்படும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் வி.ஆர். எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி செயலிகளை சப்போர்ட் செய்கிறது. இதில் உள்ள ஏராளமான சென்சார்கள் மற்றும் கேமராக்களை கொண்டு பேச்சு மற்றும் சைகை மூலம் இவற்றை இயக்க முடியும் என்பதால், பிரத்யேக கன்ட்ரோலர்கள் எதுவும் தேவைப்படாது. இதன் தற்போதய விலை 3 ஆயிரத்து 499 அமெரிக்க டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்-க்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்