ரவுடியை தேடிவந்த மற்றொரு ரவுடி கும்பல் - ரவுடி இல்லாததால் மக்களை வெட்டிய பயங்கரம் - சென்னையில் பரபரப்பு

x

ரவுடியை தேடிவந்த மற்றொரு ரவுடி கும்பல் - ரவுடி இல்லாததால் மக்களை வெட்டிய பயங்கரம் - சென்னையில் பரபரப்பு

சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் வலம் வந்து, பொதுமக்கள் இருவரை தாக்கிவிட்டு சென்ற ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவிலம்பாக்கம் அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளை ஆனந்த். இவர் மீது கொலை, அடிதடி உள்பட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், வெள்ளை ஆனந்தை தேடி, 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நன்மங்கலத்திற்கு வந்துள்ளனர். அப்போது, வெள்ளை ஆனந்தின் வீட்டை விசாரித்த ரவுடிகள், பொதுமக்கள் இருவரை அரிவாளால் வெட்டி விட்டு சென்றதுடன், வெள்ளை ஆனந்த் வீட்டில் இல்லாததால், பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்றுள்ளர். இது தொடர்பாக, வழக்குபதிந்த பள்ளிக்காரணை போலீசார், பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் யார்? என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்