அண்ணாமலைக்கு எதிராக முக்கிய தலைகள்?.. அதிமுகவுக்கு வைத்த வெடி பாஜகவில் வெடிக்கிறதா?

x
  • தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியில் அவ்வப்போது உரசல் வெளிப்பட்டு வருகிறது.
  • பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதை அடுத்து, நிர்வாகிகள் விலகல் படலம் ஆரம்பித்தது. பாஜகவிலிருந்து விலகிய அக்கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பாஜக அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், பாஜக ஓபிசி அணியின் முன்னாள் மாநில செயலாளர் ஜோதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகினர்...
  • அண்ணாமலையை வசைபாடிய அவர்கள், அண்ணாமலைக்கு எதிராக வரிந்துகட்டிய வேகத்தில் அதிமுகவிற்கு சென்றது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இதற்கு எதிர்வினையாக பாஜகவின் 2 ஆம் கட்ட, 3 ஆம் கட்ட தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து திராவிட கட்சிகளை வளர்க்கும் நிலை உள்ளதாக சாடினார் அண்ணாமலை...
  • இதற்கு பதிலடி கொடுத்த அதிமுக ஐ.டி விங்கைச் சேர்ந்த சிங்கை ஜி. ராமச்சந்திரன், ஆமா நோட்டோவுடன் போட்டி போட்ட நீங்கள் எப்படி 2021 தேர்தலில் வெற்றிப்பெற்றீர்கள் என்றதால்... கூட்டணியை பிய்த்துக்கொள்ள பாஜக ஆயத்தமாகிறதா என்ற கேள்வியெல்லாம் எழுந்தது.
  • ஆனால் மத்திய பாஜகவுடன் நெருக்கம் காட்டும் அதிமுக, பாஜக கூட்டணியில் தொடர்வதாகவே தெரிவிக்கிறது. பாஜக மத்திய தலைமையும் அதிமுக கூட்டணியை தொடரவே விரும்புகிறது.
  • இந்த நிலையில் அண்ணாமலை பேச்சுக்கள் கூட்டணியில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துகிறது.
  • இப்போது அந்த வரிசையில், திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைந்தகரையில் நடந்த பாஜக அவசர கூட்டத்தில், கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன் எனவும், அதிமுகவுடன் கூட்டணி என்றால்... பதவி விலகுவேன் எனவும் அண்ணாமலை கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன் என அண்ணாமலை சொன்னதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
  • இந்த தகவல் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என வானதியும், நைனார் நாகேந்திரனும் கூறியிருக்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்