பழமையான இச்சி மரம் முறிந்து விபத்து | நிழலுக்காக அமர்ந்திருந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

x

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த வேங்காம்பட்டியில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், அங்குள்ள கோயில் அருகே உள்ள பழமை வாய்ந்த இச்சி மரத்தின் அடியில் அமர்ந்திருந்தனர். அப்போது, பலத்த காற்று வீசியதில் மரத்தின் அடிப்பாகம் முறிந்து, கீழே அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்தது. இதில், 28 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மரக்கிளை முறிந்து மின் கம்பிகளில் விழுந்ததால், அடுத்தடுத்து மின்கம்பங்களும் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்