"140 கோடி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட கவுரவம்"... பிரதமர் மோடி பெருமிதம்..

x

பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார். பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பிரான்சின் உயரிய விருது வழங்கப்பட்டது தனக்கு அளிக்கப்பட்ட கவுரவம் அல்ல என்றும், இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்ட கவுரவரம் என்றும் பிரதமர் மோடி கூறினார். சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பது நமது விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சாதனை என்ற பிரதமர் மோடி, விண்வெளித் துறையில் இந்தியாவும் பிரான்சும் பழமையான மற்றும் ஆழமான கூட்டுறவு கொண்டிருப்பதாக கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வலுமையாக நடவடிக்கைகள் தேவை என இரு நாடுகளும் நம்புவதாக தெரிவித்த பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை இந்தியாவில் திறக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்