வாசிப்பு பழக்கத்தை சிறைவாசிகளிடம் ஊக்குவிக்கும் முயற்சி.. பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு புத்தக தானம்

x

பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் வளாகத்தில் புத்தகதானம் பெறும் மையத்தினை சிறைச்சாலை அதிகாரிகள் திறந்து வைத்துள்ளனர்.

இந்த மையத்தில் பல்வேறு தரப்பினரும் புத்தகங்களை தானமாக வழங்கி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மானூர் பகுதியை சொந்த ஊராகக் கொண்ட மில்லத் இஸ்மாயில் என்பவர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தனது 18 வயதில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி எம் ஏ எம் பில் வரை படித்து 2008 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த தினத்தில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் அவர், தன்னைப் போல்சிறையில் இருக்கும் நபர்களும் புத்தக வாசிப்பின் மூலம் நல்வழி படுத்தப்பட்டு சிறையில் இருந்து வெளியேறும் போது நல்ல மனிதராக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் கட்டமாக 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் சிறைச்சாலைக்கு வழங்கி உள்ள நிலையில், அவரது நல்லெண்ணம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்