திணறிய திருச்சி.. TTF -க்கே டஃப் கொடுத்த AK - சாலையில் திரண்ட ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ

x

திருச்சி வந்த பிரபல யூடியூபர் அசாரை காண, ஏராளமான ரசிகர்கள் பைக்கிள் பிரம்மாண்ட பேரணியாக திரண்டு வந்தனர். அதிவேகமாக பைக் ஓட்டுவது, சினிமா பாணியில் ஸ்டண்ட் செய்வது போன்றவற்றால் யூடியூபில் பிரபலமானவர் அசார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நண்பர்களுடன் பேரணி செல்வது, போலீசாரை மிரட்டுவது என பல்வேறு சர்ச்சை சம்பவங்களில் சிக்கிய அசார், திருச்சி வந்த நிலையில் அவரை காண ஏராளமான ரசிகர்கள் பேரணியாக திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்