"அஜித் vs விஜய் வெடித்த ட்விட்டர்" திடீர் சண்டை போட்டு கொள்ளும் அஜித், விஜய் ரசிகர்கள் காரணம் என்ன?

x

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் திடீரென ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் பயன்படுத்தியும், மீம்ஸ்களை பதிவிட்டும், சண்டையிட்டு வருகின்றனர்.... தீடீர் சண்டைக்கான காரணத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு....

இந்த காட்சியைப் போலவே, சம்பந்தமே இல்லாமல், விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் தோள்கள் திடீரென தினவெடுத்து சண்டையில் ஈடுபட தொடங்கிவிடுவார்கள். அப்படித்தான் இந்த சண்டையும் வெடித்துள்ளது. நடிகர் விஜய் புதிய திரைப்படம் சம்பந்தமாக ஏதாவது வெளிவந்தால்தான்,ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகும். அஜித் ரசிகர்களும் கூட இதே போல ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்வதுண்டு. ஆனால் இருவருமே எந்த அப்டேட்டும் கொடுக்காத நிலையில், KollywoodClownVIJAY மற்றும் UnRivalledThalapathyVIJAY என்ற இரண்டு ஹேஷ்டேக்குகள் திடீரென ட்ரெண்டாக துவங்கின..

ட்ரெண்டிங் ஹேஷ்டாக்குகளின் ஸ்கீரின் சாட் உள்ளது அதை பயன்படுத்தவும்))

இதை பார்த்த அஜித் ரசிகர்கள், அஜித் நடித்த படக்காட்சிகளையும் பயன்படுத்தி ஹேஸ்டேக்குகளுடன் வலம்வரச் செய்தனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பும், ட்விட்டரையே, போர்க்களமாக்கியது. விஜயின் புகைப்படத்தை, அஜித்தின் ரசிகர்கள் Morphing செய்வதும், பதிலுக்கு விஜய் ரசிகர்கள் மீம்ஸ்களை பதவிடுதுமாக ட்விட்டரே அதிரிபுதிரியானது.

ரசிகர்கள் சண்டையிடும் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ளவும்

ஆனால் இது, இன்று நேற்று நடக்கும் பிரச்னை இல்லை, பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னை. கடந்த ஆண்டு, துணிவு மற்றும் வாரிசு படம் வெளியான போது, போஸ்டர் பிரச்னை எழுந்தது.போஸ்டர்களை மாற்றி, மாற்றி கிழித்துக் கொண்டவர்கள், ஒரு கட்டத்தில் தெருவில் இறங்கி சண்டை போடத்துவங்கிவிட்டார்கள். இது போல பல முறை நடந்திருக்கிறது

ரசிகர்கள் சண்டையிடும் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ளவும்"Ajith vs Vijay's twitter explosion" What is the reason of Ajith and Vijay fans fighting suddenly?

சினிமாவை கடந்து, அஜித் மற்றும் விஜய் இருவருமே நல்ல நண்பர்கள். தங்கள் ரசிகர்கள் தங்களுக்காக சண்டையிடுவதை அவர்கள் ஒரு போதும் விரும்புவதில்லை. மொதல்ல உங்க வாழ்கைதான் முக்கியம், போய் பொழப்ப பாருங்க, அப்புறமா எங்கள பாருங்க என இருவருமே பல முறை கூறிவிட்டனர், ஆனால் ரசிகர்கள்தான் அவர்கள் பேச்சை கேட்ட பாடில்லை...


Next Story

மேலும் செய்திகள்