தலைகீழாக மாறிய களம்.. பாஜகவுக்கு ஈபிஎஸ் அதிர்ச்சி வைத்தியம் - டெபாசிட்டை காலிசெய்ய திமுக வியூகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக களமிறங்குவது தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளது. இந்த தேர்தலில் கட்சிகளின் வியூகங்கள் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு
தலைகீழாக மாறிய களம்.. பாஜகவுக்கு ஈபிஎஸ் அதிர்ச்சி வைத்தியம் - டெபாசிட்டை காலிசெய்ய திமுக வியூகம்
x


தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் மீண்டும் போட்டி யிடுகிறது காங்கிரஸ். ஆளும் கட்சி ஆதரவு, வலுவான கூட்டணி என களமிறங்கும் காங்கிரசில், ஈ.வி.கே.எஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளாராக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், இது அனுதாப அலையையும் ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்படுகிறது. மறுபுறம் எதிரணியான அதிமுக கூட்டணியில், கடந்த முறை போட்டியிட்ட தமாகா போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக அதிமுகவே களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உட்கட்சி பிரச்சினை வழக்குகள் காரணமாக இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? கிடைக்காதா என்ற கேள்விக்கு மத்தியில் கொங்கு மண்டத்தில் தனது செல்வாக்கை காட்டவும், கட்சியில் தனது தனிப்பெரும் தலைமைக்கான செல்வாக்கை நிரூபிக்கவும் அதிரடியாக ஆட்டத்திற்கு தயாராகியிருக்கிறார் ஈபிஎஸ். அதிமுகவின் இந்த முடிவு அரசியல் களத்தை சூடாக்கி யுள்ளது. மறுபுறம் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக தமாகா வை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக, பாஜகவை கலந்து ஆலோசிக்காமல் போட்டி அறிவிப்பை ஏற்படுத்தியதால் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.ஆனாலும், பாஜகவை பொருத்தவரை 2024 நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில் கவனம் செலுத்துவதால் இந்த தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கும் என்றே எதிர்பார்க் கப்படுகிறது. கொங்கு மண்டத்தில் போட்டியென்பதை ஓபிஎஸ் தவிர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கூட்டணியிலிருந்து விலகிவிட்டதாக தெரிவித்த பாமக, போட்டியிடுமா அல்லது புறக்கணிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள், அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் திமுகவை பொறுத்தவரையில் இடைத்தேர்தல் அரசில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், வெற்றி கவுரவ பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அங்கு வெற்றி பெறுவது டன், அதிமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்து, தாங்கள் அசுர பலத்துடன் இருப்பதை உணர்த்த வேண்டும் என நினைக்கிறது.

இதற்கிடையே வழக்கம்போல் தனித்து களம் என அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். வரும் 27 ஆம் தேதி கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என டிடிவி தினகரனும், 23 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படுவதாக தேமுதிகவும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்