43 ஆண்டுகளுக்கு பின் கால்பந்தாட்டத்தை நேரில் கண்டு ரசித்த ஈரான் பெண்கள்

x

43 ஆண்டுகளுக்கு பின் கால்பந்தாட்டத்தை நேரில் கண்டு ரசித்த ஈரான் பெண்கள்


ஈரானில் நடைபெற்ற கால்பந்த போட்டியைக் காண, நீண்ட வருடங்களுக்கு பிறகு பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்குப் பின், ஈரானில் விளையாட்டுப் போட்டிகளை நேரில் காண பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா மற்றும் பெண்கள் உரிமை போராளிகளின் தொடர் அழுத்தத்தின் காரணமாக, பெண்கள் மீதான தடையை ஈரான் அரசு விலக்கியுள்ளது. இந்நிலையில் டெஹ்ரானில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியை நேரில் காண 500 பெண்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஃபிஃபா, பெண்களுக்கான சுதந்திரத்தை நிலைநாட்ட உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்