ஈரோடு கிழக்கு வேட்பாளர் யார்?.. சஸ்பென்ஸ் உடைக்கும் OPS - அண்ணாமலை என்ன சொல்வார்?

ஈரோடு கிழக்கு வேட்பாளர் யார்?.. சஸ்பென்ஸ் உடைக்கும் OPS - அண்ணாமலை என்ன சொல்வார்?
x


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து சுமார் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நேரத்தில் நடத்தப்படுகிற இடைத்தேர்தல் என்பதால் அதிமுக அதனை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது.

ஆளுங்கட்சிக்கு எதிரான விமர்சனங்களை அறுவடை செய்ய காத்திருக்கும் அதிமுக, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் நிறுத்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கூட்டணி கட்சியான பாஜகவிடம் ஆதரவு கேட்க இன்று அதிமுகவினர் பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இந்த சந்திப்பில் ஈபிஎஸ் தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இடைத்தேர்தல் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது.

இதற்கு நடுவே, காலை 8 மணியளவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். அப்போது இடைத்தேர்தலில் தங்களது அணியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்