அப்போ தங்க கவசம் வழங்கிய ஜெ. - இப்போ வெள்ளி கவசம் வழங்கிய ஓபிஎஸ்

x

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக்கவசம் வழங்கி மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நாளான இன்று, அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக, 9 லட்சத்து 11 ஆயிரத்து 745 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசம் மற்றும் வெள்ளி ருத்ராட்ச மாலை வழங்கி ஓ.பி.எஸ் மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்