என்.டி.டி.வியின் பங்குகளை வாங்கிய - அதானி குழுமம் | NDTV | Adani Group

x

பிரபல ஆங்கில தொலைகாட்சி செய்தி சேனலான என்.டி.டி.வியில் 29.18 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது.

என்.டி.டி.வியின் நிறுவனர்களான பிரனாய் ராய் மற்றும் ராதிக்கா ராய்க்கு சொந்தமான ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவத்திற்கு அளிக்கப்பட்ட கடன்களுக்கு ஈடாக, அதன் வசம்

உள்ள 29.18 சதவீத என்.டி.டி.வி பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனத்தின் இயக்குனர் பதவிகளை பிரானய்

ராய் மற்றும் ராதிகா ராய் ராஜினாமா செய்துள்ளனர். என்.டி.டிவியில் இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் 32.36 சதவீத பங்குகள் உள்ளதால் என்.டி.டி.வி

இன்னும் இவர்களின் கட்டுப்பாட்டில் தொடர்கிறது.

இந்நிலையில் 26 சதவீத என்.டி.டி.வி பங்குகளை, பங்குதாரர்களிடம் இருந்து வாங்க ஒரு கொள்முதல் திட்டத்தை அதானி குழுமம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 5இல் முடிவடைய உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் 26 சதவீத கூடுதல் பங்குகளை அதானி குழுமம் வாங்கினால், பிறகு என்.டி.டி.வியின் நிர்வாகம் அதானி குழுமத்திற்கு சென்று விடும்.


Next Story

மேலும் செய்திகள்