இந்தி நடிகைகளை ஓவர்டேக் செய்த நடிகை சமந்தா..!

x

2023ம் ஆண்டின் பிரபலமான பெண் நட்சத்திரங்கள்

பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நடிகை சமந்தா...

அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...


தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம்

தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா.

சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, தமிழ் , தெலுங்கு

மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் "ஊ சொல்றியா மாமா.." என்ற ஒற்றை பாடலுக்கு நடனமாடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

ஆனாலும் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்கவே அவர் முன்னணி நாயகிகள் வரிசையில் தொடர்ந்தார்.

இந்நிலையில், மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வரும் சமந்தா, புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாக வில்லை என்று கூறப்படுகிறது.

திரையுலகை விட்டு சமந்தா சற்று விலகியிருந்தாலும், அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை. அதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது, சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு.

புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று கடந்த ஜூன் மாதம் நடத்திய கருத்து கணிப்பில், 2023-ம் ஆண்டின் பிரபலமான பெண் நட்சத்திரங்கள் பட்டியலில் பல முன்னணி இந்தி நடிகைகளை பின்னுக்கு தள்ளி நடிகை சமந்தா முதல் இடம் பிடித்துள்ளார்.

நடிகை சமந்தா 8-வது முறையாக இந்த கவுரவத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில், சமந்தாவுக்கு அடுத்தபடியாக இந்தி நடிகை ஆலியாபட் இரண்டாமிடம் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் நடிகைகள் நயன்தாரா, தீபிகா படுகோனே, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோர் உள்ளனர்.

விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடியின் நடிப்பில், உருவாகியுள்ள 'குஷி' படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமந்தா ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது இந்த கருத்து கணிப்பு.


Next Story

மேலும் செய்திகள்