அரசு பள்ளி ஆய்வகத்தில் மாணவன் மீது தெறித்த 'ஆசிட்' - சுருண்டு விழுந்த அடுத்த நொடி....

x

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், அரசுப் பள்ளி அறிவியல் ஆய்வகத்தில், அமிலத்தின் மீது அமர்ந்த சிறுவனுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிதம்பரம் விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அரசு பச்சையப்பா மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு படித்து வரும் மாணவன், பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு சென்றுள்ளார். ஆய்வகம் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால், மேசைகளில் இருந்த அமிலம் மாணவர் மீது பட்டுள்ளது. அப்போது மாணவனுக்கு உடலில் எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவனுக்கு, வாந்தி, மயக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படவே, பதறிப்போன பெற்றோர், சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்