வருமான வரி வழக்குகளை விசாரிக்கும் திறன் - வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

x

வருமான வரி வழக்குகளை விசாரிக்கும் திறன் - வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்


வருமான வரி வழக்குகளை எதிர்கொள்ளக் கூடிய திறன்களை வழக்கறிஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி கூறினார்.

வருமான வரி வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்களுக்கென்று மெட்ராஸ் டேக்ஸ் பார் என்ற சங்கத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சங்கத்தையும், சங்கத்தின் இலட்சினை மற்றும் இணையதளத்தையும், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மற்ற வழக்குகளைப் போல் அல்லாமல், வருமான வரி வழக்குகளை கையாள்வது கடினமானது என்றும், அதனை எதிர்கொள்வது மிகவும் சவாலான பணி என்றும் கூறினார். இத்தகைய சவால்களை எதிர்கொள்ளக்கூடிய திறன்களை வழக்கறிஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்