மதுபோதையில் தினம் தினம் தொடர்ந்த டார்ச்சர்.. மாமனாரோடு சேர்ந்து கணவனை கொன்ற மனைவி..

x

"சரக்கு" சிலருக்கு செலிபிரேஷன்… பலருக்கோ இது தான் எமோஷன்…

மில்லி உள்ளே சென்றால் குழந்தையாக மாறிவிடும் ஆண்கள் கூட்டம் ஒருபுறமிருக்க… கிக்கு ஏறிய சிலரோ அருகிலிருப்பவர்களை தூக்கிபோட்டு பந்தாடும் ரக்கட்டு பாயாக மாறிவிடுகிறார்கள்…

நகைச்சுவையாக நாம் கடந்து போன இந்த காட்சியை நிஜத்தில் ஒருவர் தினம் தினம் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்… விளைவு … ஒரு கொடூர கொலை.

தரையில் உரறைந்துகிடந்த ரத்தம்… காவல்துறையின் தீவிர விசாரணை என ஊரே கூடி பரபரப்பாக காட்சியளிக்கும் இந்த வீட்டில்தான் அந்த பயங்கரம் நடந்திருக்கிறது.

அந்த கொடூரத்தை செய்தது வேறுயாருமில்லை…. காவல்துறை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக்கொண்டிருக்கும் இந்த முதியவரும், அவரது மருமகளும் தான்.

சொந்த குடும்பத்தினரே கொலை செய்த குற்ற பின்னணியை தெரிந்துகொள்ள விசாரணையில் இறங்கினோம்…

கொல்லப்பட்டவர் சசிகுமார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர். 50 வயதாகிறது. இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகள்கள் மற்றும் மகன் உள்ளனர். சொந்த ஊரில் விவசாயம் செய்துவந்த சசிகுமார் தன்னுடைய 25வது வயதிலேயே மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்.

மனைவி, பிள்ளைகள் தனக்கென ஒரு குடும்பம் இருப்பதையே மறந்து மதுவில் மூழ்கி போயிருக்கிறார். சம்பாதிக்கும் பணம் முழுவதையும் சரக்குக்கே தாராளமாக செலவு செய்து வந்திருக்கிறார். அதோடு மனைவி பிள்ளைகளை அடித்து டார்ச்சர் செய்திருக்கிறார் சசிக்குமார்.

இந்த சூழலில்தான் கணவரை திருத்துவதற்காக லட்சுமி உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து சசிகுமாரை வெளி நாட்டிற்கு வேலைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

ஆனால், ஃபாரீனுக்கு சென்ற சில மூன்று மாதத்திலேயே வேலை பிடிக்காமல் ஊர் திரும்பியிருக்கிறார் சசிக்குமார். மீண்டும் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தினரை அடித்து கொடுமை படுத்தியிருக்கிறார். அந்த டார்ச்சர்தான் சம்பவத்தன்று எல்லை மீறி கொலையில் முடிந்திருக்கிறது.

சம்பவத்தன்று இரவு மதுபோதையில் ரகளை செய்த சசிக்குமார்… விடியற்காலை உறக்கத்திலிருந்த குடும்பத்தினரை எழுப்பி சண்டையிட்டிருக்கிறார். தினமும் சசிக்குமாரின் சித்திரவதைகளை அனுபவித்து ஆத்திரமடைந்த லட்சுமியும் சசிகுமாரின் தந்தை சுப்பிரமணியும் போதை வெறியிலிருந்தவரை கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள்.

பிறகு வீட்டிற்கு பின்பக்கம் சசிக்குமாரை இழுத்துச் சென்றவர்கள் கத்தியால் குத்தி கொலைச் செய்திருக்கிறார்கள்…

பொழுது விடிந்திருக்கிறது. சசிக்குமார் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்த காவல்துறை லட்சுமியையும், அவரது மாமனார் சுப்பிரமணியையும் கைது செய்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்