கிரிக்கெட் போட்டிக்கு சென்ற பள்ளி மாணவனுக்கு நடந்த சோக சம்பவம் | எமனாக மாறிய கடல் அலை

x

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரின் மகன் மோகன், அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த சனிக்கிழமை அதே பள்ளியில் படித்து வரும் 15க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுபுரத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிக்கு ஆசிரியர் ஞானசேகரன் அழைத்துச் சென்றுள்ளார். போட்டிகள் முடிந்த பிறகு கல்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவர்களை விட்டு விட்டு ஆசிரியர் சென்றுள்ளார். ஆனால் மாணவர்கள் நேராக கல்பாக்கம் கடலில் சென்று குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மோகன் கடல் அலையில் சிக்கி பலியானார். தகவலறிந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், ஆசிரியர் ஞானசேகரனே இந்த சம்பவத்துக்கு காரணம் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்