திடீரென சந்தைக்குள் புகுந்த புலி - அதிர்ச்சியில் அலறி ஓடிய மக்கள் | uttrakhand | thanthi tv

x

உத்தரகாண்ட்டில்,தேசிய பூங்காவில் இருந்து வெளியேறி, சந்தைப்பகுதியில் புகுந்த புலியை சுடப்பட்ட வீடியோ, வைரலாகியுள்ளது. புகழ்பெற்ற கார்பெட் தேசிய பூங்காவில் இந்த புலி, காட்டில் இருந்து வழி தவறி, அருகே இருந்த அல்மோரா மாவட்டத்தில் உள்ள மார்ச்சுலா சந்தைக்குள் புகுந்துள்ளது. அந்த புலியை சந்தை பகுதியில் இருந்து வாகனத்தில் அமர்ந்திருந்த படி சுடப்பட்ட வீடியோ வைரலாகி உள்ளது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த கார்பெட் புலிகள் சரணாலயத்தின் இயக்குனர் தீரஜ் பாண்டே, மீட்பின் போது விலங்குகளை விரட்ட சில சமயங்களில் காற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகவும், எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்