ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் - சரியான நேரத்தில் சொன்ன பெண் - தப்பிய பல உயிர்கள்

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை பெண் ஒப்பந்த பணியாளர் கண்காணித்து தெரிவித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திருத்துறையூர்- சேந்தனூர் இடையே ரயில்வே தண்டவாளத்தில், திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை ரயில்வே ஒப்பந்த பெண் பணியாளர் மஞ்சு என்பவர் கண்காணித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள், சேதமடைந்த தண்டவாளத்தை அகற்றிவிட்டு, சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். பெரும் விபத்து தவிர்ப்பதற்கு உதவிய மஞ்சுவை, ரயில்வே போலீசார் பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்