ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டின் தம்பதி பற்றிய கதை

x

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில், கார்த்திகி கோன்சால்வேஸ் இயக்கிய 'THE ELEPHANT WHISPERERS' குறும்படம் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் காப்பகத்தில், ஆதரவற்ற 2 யானைக் குட்டிகளை வளர்த்த, தம்பதிகளை பற்றிய ஆவணப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. காடுகள், யானைகளை மிக நேர்த்தியாக படம்பிடித்து சிறந்த ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம், ஆஸ்கர் விருதை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்